அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்று ராஜபார்வை. இதில் நடிகர் முன்னா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் புகழ் ராஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதன் டைட்டிலும், ஹீரோவுக்கு கண் தெரியாத என்ற கான்செப்ட்டும் தான் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. ஆனால், சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே அனைவருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு சுவாரசியம் இல்லாத கதை ஓட்டம், திரைக்கதை காரணமாக பலருக்கு இந்த சீரியலை பிடிக்கவில்லை. இதன் சுவாரசியத்தை கூட்டுவதற்காக நடிகை ஆனந்தி இந்த சீரியலில் இணைந்தார். இருப்பினும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத காரணத்தல் சீரியலை நிறுத்திவிட்டனர். 207 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான ராஜபார்வை சீரியல் டிசம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலும் ரக்ஷிதா விலகிய பின் சறுக்கலாக சென்று கொண்டிருக்கிறது. எனவே, அதையும் முடித்து வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் வைதேகி காத்திருந்தாள், ஈரமான ரோஜாவே 2 ஆகிய இரண்டு புதிய சீரியல்கள் விரைவில் வெளியாகிறது.