வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
ஒரு காலத்தில் படங்களை தான் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்து தொலைக்காட்சிகளின் கவனமும் சீரியல் பக்கம் திரும்பிவிட்டது. அந்த அளவிற்கு தொலைக்காட்சி தொடர்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது.
அந்த வகையில் பல வருடங்களாக சீரியல் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் டிவி ஒன்று நான்கு நடிகைகளை வைத்து பிரம்மாண்டமாக தொடர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த புதிய தொடரில் ராதிகா சரத்குமார், குஷ்பு, மீனா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். தற்போது இவர்கள் நால்வரையும் ஒரே சீரியலில் நடிக்க வைத்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரம்மாண்டத்தை நிகழ்த்த அந்த டிவி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங்கும் கொங்கு மண்டலத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.