அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' | 'ஜெயிலர்' வசூலை தாண்டுமா 'குட் பேட் அக்லி' | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் சிம்பு! | மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போகிறதா? ரெட்ரோ படத்தின் புரமோஷனில் அடுத்த படத்தை அறிவித்த சூர்யா! | ஒரே நாளில் சந்தானம், சூரி படங்களுடன் மோதும் யோகி பாபு | 45 வயது சந்தானத்துக்கு அம்மாவான கஸ்தூரி ! |
கலர்ஸ் தமிழில் ரேஷ்மா, மதன் பாண்டியன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அபி டெய்லர்ஸ். சின்னத்திரை ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் 100-வது எபிசோடை கொண்டாடிய சீரியல் குழுவினர் இனி வரும் எபிசோடுகளில் பல சர்ப்ரைஸ்களை வைத்திருப்பதாக தெரிவித்ததோடு அதை திரைக்கதையில் செயல்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் கடத்தல், வில்லன்கள் என கமர்ஷியலாக சென்று கொண்டிருக்கும் எபிசோடில் ஹீரோவை காப்பாற்ற பிரபல ஹீரோ ஜெய் ஆகாஷ் போலீஸாக என்ட்ரி ஆகியுள்ளார். இதுகுறித்து ஜெய் ஆகாஷ் கூறுகையில், 'நான் புதிய ப்ராஜெக்டில் போலீஸ் ஆபிசராக நடிக்க உள்ளேன். இது குறித்த விபரங்களை விரைவில் தெரிவிக்கிறேன்' என்றார்.
ஜெய் ஆகாஷ் ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சி நீதானே என் பொன் வசந்தம் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.