'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பிரைம் டை சீரியல்களை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் வெளியாவதற்கு முன்பே அதன் புரொமோ சர்ச்சையில் சிக்கி பிரபலமானது.
இந்நிலையில் பவித்ரா மற்றும் வினோத் காம்பினேஷனில் இந்த சீரியல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான சீரியல்களின் வெற்றிக்கு அந்த சீரியலில் வரும் நாயகன் நாயகிக்கு இடையே வரும் காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் தான் கை கொடுக்கிறது. அந்த வகையில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகன் வெற்றிக்கும், நாயகி அபிநயாவுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி, சண்டை ஆகியவை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. எனவே, இதுநாள் வரையில் டிஆர்பியில் சைலண்டாக இருந்து வந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தற்போது பிரைம் டைம் சீரியல்களை விட டிஆர்பியில் நல்ல புள்ளிகளை பெற்று முன்னேறி வருகிறது.