நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நமீதா மாரிமுத்து இன்ஸ்டாகிராம் லைல்வில் பிக்பாஸ் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் நமீதா மாரிமுத்து யாரும் எதிர்பாரத வகையில் வெளியேறினார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார். நமீதா மாரிமுத்து வெளியேற அவருக்கும் தாமரைச் செல்விக்கும் ஏற்பட்ட வாக்குவாதமும் அதனை தொடர்ந்து நடந்த சில வேண்டாத சம்பவங்களும் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் உடல்நல பிரச்னையால் அவர் வெளியேறியதாக மற்றொரு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், யார் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக இருப்பார்கள் என்று எழுப்பிய கேள்விக்கு சிபி சந்திரன் அல்லது இசைவாணி இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என கூறினார். மேலும், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்டு ரவுண்டில் போவீர்களா என்று கேட்டதற்கு, "போகலாம் போகாமலும் இருக்கலாம், பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.