விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை |

வெள்ளித்திரை நடிகையான ராஜஸ்ரீ தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கருத்தம்மா படம் தமிழ் திரையுலகில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அந்த படத்தின் டைட்டில் ரோலில் நடித்த ராஜஸ்ரீ அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார். அவர் தற்போது கலர்ஸ் தமிழின் ஹிட் தொடரான சில்லுனு ஒரு காதல் தொடரில் கல்பனா தேவி எனும் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் ஏற்கனவே வில்லி கதாபாத்திரங்களில் நடித்த ராஜஸ்ரீ தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ராஜஸ்ரீ தமிழில் முன்னதாக 'கங்கா யமுனா சரஸ்வதி', ‛அகல் விளக்குகள்', 'வம்சம்', 'மகள்', 'சித்தி' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.




