சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை முடித்ததும் உடனடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிறது
அதையடுத்து விஜய்யின் 67ஆவது படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் மீண்டும் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கப்போவதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கமலின் விக்ரம் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அப்பட வேலைகளை முடித்ததும் விஜய் படத்திற்கான கதை பணிகளை தொடங்கப்போகிறாராம்.