ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சூப்பர் ஹீரோ படங்களை தொடர்ந்து வெளியிடும் மார்வெல் நிறுவனத்தின் 26வது சூப்பர் ஹீரோக்கள் படம் எண்டரல்ஸ். ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமாயில் நஞ்சியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி மற்றும் ஏஞ்சலினா ஜூலி ஆகியோர் நடித்துள்ளனர். சோலோ ஜாவோ இந்த படத்தை இயக்கியுள்ளார். பென் டேவிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரமின் திஜாவடி இசை அமைத்துள்ளார்.
வெளி மண்டலத்திலிருந்து வந்த ஒரு அந்நிய இனம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமிக்கு வந்து இங்கு மறைந்து வாழ்கிறது. இந்த இனத்தின் எதிர் இனம் இவர்களை தேடி அலைகிறது. கடைசியாக பூமியில் மறைந்திருப்பதை கண்டுபிடித்து அதனை அழிக்க வருகிறது. இந்த இரண்டு பெரும் சக்திகளின் சண்டைக்குள் மாட்டிக் கொள்ளும் பூமியை சூப்பர் ஹீரோக்கள் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
படம் தீபாவளி அன்று இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.