சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

போலி புராதன பொருட்களை தயாரித்து அவற்றை பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லி விற்பனை செய்து வந்த மோன்சன் மாவுங்கல் என்பவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி கும்பலுக்கும் நடிகர் பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோன்சன் மாவுங்காவுக்கும், பாலாவுக்கும் தொடர்பு இருப்பதாக பல ஆடியோ ஆதாரங்கள் வெளிவந்தது. மோன்சனுக்கும், அவரது டிரைவர் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது மோன்சனுக்கு ஆதரவாக பாலா அஜித்துடன் பேசிய ஆடியோக்கள் வெளியானது.
இது தொடர்பாக பாலா அளித்துள்ள விளக்கம் வருமாறு: நான் கொச்சியில் இருந்தபோது மோன்சனின் பக்கத்து வீட்டில் வசித்தேன். இதனால், அவருக்கும் எனக்கும் நட்பு இருந்தது. அவர் நல்ல காரியங்கள் செய்து வந்தார். இதனால், அவரை எல்லாருக்கும் பிடிக்கும். நான் வசித்த பகுதில் இருந்தவர்கள் அவருடன் நல்ல நட்பில் இருந்தார்கள்.
மோன்சனுக்கும், அவரது டிரைவர் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் வரை சென்றபோது இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது உண்மைதான். ஆனால் அவர் செய்த மோசடி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்கிறார் பாலா.
பாலா இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். மலையாள பாடகி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா. பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்தார்.