நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

சாகுந்தலம் படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடிப்பவர் புதிய படங்களில் நடிப்பதற்கு கதைகள் கேட்டு வருகிறார். சமந்தா ஹிந்தி படங்களில் இதுவரை நடிக்காத போதும் அவர் நடித்த பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்ததொடர் சமந்தாவிற்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அந்தவகையில், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், பேமிலிமேன்-2 தொடரில் சமந்தா மிகச்சிறப்பாக நடித்திருந்ததாகவும், அவரது கேரக்டரை தான் வெகுவாக ரசித்ததாக தெரிவித்திருப்பவர், அவருடன் இணைந்து நடிக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஷாகித் கபூர் தற்போது பேமிலிமேன்-2 தொடரை இயக்கிய ராஜ்-டிகே இயக்கி வரும் புதிய வெப்தொடரில் நடித்து வருகிறார்.