விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக ஒடிடி தளத்தில் பிக்பாஸ் (ஹிந்தி) நிகழ்ச்சி துவங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட்-8ல் துவங்கிய இந்த ஒடிடி பிக்பாஸ் சீசன் செப்-18 அன்று நிறைவு பெற்றது. மொத்தம் 42 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 13 போட்டியாளர்களில் திவ்யா அகர்வால் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதே திவ்யா அகர்வால் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் சிலருடன் மோதல் போக்கை கடைபிடித்தார் என்று கரண் ஜோஹரிடம் அவ்வப்போது குட்டுக்கள் வாங்கினார். இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கரண் ஜோஹரை கோபப்படுத்தியதால் அவரது பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது என நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த திவ்யா அகர்வால், “எனது வேலை சரியாக இருக்கும் பட்சத்தில் கரண் ஜோஹர் படத்தில் நடித்துதான் எனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை” என அதிரடியாக கூறினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சட்டென்று, “நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் கரண் ஜோஹரின் படங்களாக தேடிப்பிடித்து பார்ப்பேன்” என அவருக்கு ஐஸ் வைக்கவும் செய்தார்.




