''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த 2017ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த ஒரு விருந்தில் போதை மருந்து புழங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்திய போலீசார் போதை பொருள் ஏஜெண்ட் கெல்வின் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்தான்.
இதையடுத்து தெலுங்கு நடிகர்கள், ரவிதேஜா, தருண், நவ்தீப், ராணா, நடிகைகள் சார்மி, ரகுல் பிரீத் சிங், முமைத்கான் இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 13 தெலுங்கு முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணைக்கு பிறகு நேற்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நீண்ட அந்த குற்றப்பத்திரிகையில் நடிகர், நடிகைகள் யாருக்கும் இதில் தொடர்பு இருப்பதற்காக போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் புரிஜெகநாத் மற்றும் நடிகர் தருண் ஆகியோர் தாமாக முன்வந்து போதை மருந்து ஆய்வக சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தனர். இதில், போதை மருந்து பயன்படுத்தியதாக எந்தவித தடயங்களும் அவர்களிடம் இல்லை என்று தெரியவந்தது. வழக்கை திசை திருப்பவே கெல்வின் இவ்வாறு தெரிவித்திருப்பது தெரிந்தது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பட்டியலில் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சேர்க்கவில்லை என்று கலால் துறை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.
போதை வழக்கில் இருந்து தெலுங்கு நடிகர், நடிகைகள் விடுவிக்கப்பட்டதை சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நடிகர் நடிகைகளும் நீதி வெல்லும் என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.