இளவரசியாக நடிக்கும் ரக் ஷனா | பொங்கல் போட்டி : தியேட்டர்கள் கிடைக்கத் தடுமாறும் தெலுங்குப் படங்கள் | 'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை |

அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த் நடிப்பில் என்றாவது ஒரு நாள் என்ற படம் உருவாகியுள்ளது. ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். தி தியேட்டர் பீப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடப்பெயர்வு கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. படத்தில் தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியவற்றையும் இயக்குனர் கையாண்டுள்ளார். இந்தப் படம் சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது வென்றது குறிப்பித்தக்கது.
தற்போது இந்தப் படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்.,3ல் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.