மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் உலகம் முழுவதும் எண்ணற்ற திரைவிழாக்களில் கலந்து கொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது சின்னஞ்சிறு கிளியே. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பையும் அன்பையும் மனதை உருக்கும் வகையில் சொல்லும் படம்.
அத்துடன் மருத்துவ துறையில் புகுந்திருக்கும் வியாபார ரீதியிலான கார்பரேட் வணிகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறபடம். இதனை செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரித்து, நடித்துள்ளார். சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கியுள்ளார்.
கரகாட்டக்காரன் புகழ், மறைந்த நடிகர் சண்முகசுந்தரத்தின் மகன் பாலாஜி சுந்தரம் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஒளிப்பதிவு பாண்டியன், இசை மஸ்தான் காதர், உலக ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்த இப்படம் வருகிற 24ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.