ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தொண்ணூறுகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் டான்சராக அறிமுகமாகி, அதன்மூலம் கிடைத்த புகழால் பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிரபுதேவா, நடிப்புத்துறைக்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் இயக்குனர் அவதாரம் எடுத்து ஒன்றிரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிரபுதேவா பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டு டைரக்சனில் மட்டும் கவனம் செலுத்தினார்.
பின்னர் ஒரு கட்டத்தில் டைரக்சனில் தொய்வு ஏற்படவே பீல்டில் நிலைத்து நிற்பதாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரபுதேவா. இப்போதுகூட அவர் நடித்துள்ள பொன்மாணிக்கவேல், யங் மங் சங், பஹீரா உட்பட நான்கு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் டைரக்சனை விட அவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கவே செய்கிறது.
இந்தநிலையில் டைரக்சனில் தொடர்ந்து சரிவையே சந்தித்துவரும் பிரபுதேவா, கடைசியாக இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய தபாங்-3, ராதே இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. அதனால் இனி டைரக்சனுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேர நடிகராக தனது சினிமா பயணத்தை தொடர முடிவு செய்துள்ளாராம் பிரபுதேவா.