Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாட்ரிக் தோல்வியில் விஜய் சேதுபதி - ரசிகர்கள் அட்வைஸ்

19 செப், 2021 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-failed-in-three-consecutive-films

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பிடித்தவர் விஜய் சேதுபதி. சின்னச்சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் தனி நாயகனாக நடித்து கவனம் பெற்றார். அதன்பின் அவர் நாயகனாக நடித்து 2012ல் வெளிவந்த 'பீட்சா' படம் அவருக்கு பெரிய திருப்புமுனையைப் பெற்றுத் தந்தது.


அதன்பின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தார். அதன்பிறகு, கடந்த சில வருடங்களில் அதிகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி.


2018ல் வெளிவந்த '96' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய வெற்றயைப் பெறவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் வில்லனாகத்தான் நடித்திருந்தார். அப்படத்தில் கூட அவரது வில்லத்தன நடிப்பு அதிகம் பேசப்பட்டது.


அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து கடந்த பத்து நாட்களில் 'லாபம்' படம் தியேட்டரிலும், 'துக்ளக் தர்பார்' படம் டிவியிலும், 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படங்களைப் பற்றி விமர்சகர்கள் விமர்சித்ததை விட ரசிகர்கள் மிகக் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.


விஜய் சேதுபதிக்கு என்ன ஆச்சு, ஏன் இது மாதிரியான படங்களில் அவர் நடிக்கிறார். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தவில்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூன்று படங்களிலுமே அவருடைய நடிப்பு சரியில்லை என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. இதெல்லாம் விஜய் சேதுபதி கவனிப்பாரா, அல்லது அவர் போக்கில் செல்வாரா?. விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர்,' படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.


Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
என்னை பிரபலமாக்கிய போட்டோ: மனம் திறக்கும் ரம்யா பாண்டியன்என்னை பிரபலமாக்கிய போட்டோ: மனம் ... தாஜ்மஹாலில் அஜித்; வைரலாகும் புகைப்படங்கள் தாஜ்மஹாலில் அஜித்; வைரலாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
22 செப், 2021 - 22:48 Report Abuse
ஏகன் ஆதன் நன்றி வணக்கம்
Rate this:
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
22 செப், 2021 - 10:25 Report Abuse
Vivekanandan Mahalingam அவர்க்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஏதாவது பாதிரியார் வந்து அவரை தூக்கிவிடுவார். இந்த கேவலமான படங்களை பாக்கும் ரசிகர்களுக்குதான் கஷ்டம்
Rate this:
Raja - New Delhi,இந்தியா
21 செப், 2021 - 10:13 Report Abuse
Raja In recent times not seeing Movies in theatres. The said actor Pizza I have seen,it is because of the storyline, concept (story) The movie was a hit. On seeing his dialogue delivery, acting, movements, Dance fight I think he is not a fit product for cinema, in particular variety roles. He acts monotonously without any expression, also his dialogues are supporting Tamil Nadu Urban Naxals. .Take the example of comedy stars Soori, Santhanam, they show some variation in their face. As usual Tamil Nadu Tvs and Press are normally uplit not worth candidate in Politics and time. He is one of the products in the same wavelength. This is my view.Hope the said actor deviate from monotonous acting ,he may have future in Tamil movies
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
21 செப், 2021 - 04:45 Report Abuse
meenakshisundaram தரம் இல்லாதவர்களை போற்றுவதக்கு தமிழன் கிட்டக்க எவனும் வர முடியாது .ஹீரோ என்றாலே ம் .இம்புட்டுதானா ?ன்னு கேக்குற அளவுக்கு நம்ம ரசிகர்கள் (?) இவர் போன்றவர்களை தூக்கிடறானுங்கோ காலம் இதற்க்கு தீர்வு கொடுத்துவிடும் .
Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,ஐக்கிய அரபு நாடுகள்
20 செப், 2021 - 20:36 Report Abuse
குறையொன்றுமில்லை மமதை வந்துவிட்டால் இப்படி தான் நாம் நடிப்பது தான் நடிப்பு என்று இருந்தால் இப்படி தோல்வி தன அடையும். நோக்கமா நோம்பி கும்பிட முடியுமா
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in