இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ரஜினியின் பேட்ட படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் வெளியானது போன்று இந்த ஆண்டு தீபாவளிக்கும் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் அஜித்தின் வலிமை மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தீபாவளிக்கு வலிமை வெளியாகவில்லை என்பது உறுதியாகி விட்டது. அந்த வகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் சிம்புவின் மாநாடு வெளியாகிறது.
மேலும், அஜீத்தின் வலிமை படத்தை கிறிஸ்துமஸ்க்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேநாளில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றும் பணிகள் இப்போதே தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.