அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் என்பவர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்ததுடன் நடிக்கவும் செய்துள்ளார்.
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சாந்தனு, அதுல்யா, மிர்ச்சி சிவா, யோகிபாபு, ரவீந்தர் சந்திரசேகர், ஸ்ரீஜர், தருண் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாந்தனு பேசும்போது : இந்தப் படம் பார்க்கும் போது லாஜிக் இல்லாமல் பார்த்தால் ரெண்டு மணி நேரம் நல்லா குடும்பத்தோட உட்கார்ந்து சிரிக்கலாம். இந்தப் படம் அடல்ட் படம் என்று நிறைய பேர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கிடையாது. இது குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய எண்டெர்டெயின்மெண்ட் படம். ஒருத்தர் ஜெயிக்கனும் என்றால் அவர் மட்டுமே நினைத்தால் மட்டும் போதாது. குறைந்தது 10 பேராவது நினைக்க வேண்டும். நீங்கள் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பேசினார்.
அதுல்யா ரவி பேசிய போது, "சாந்தனு மிகவும் இனிமையான நடிகர். படப்பிடிப்பில் இருக்கும் போது சில சில குறிப்புகள் கொடுப்பார். படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வோம். எப்போதும் ஊக்குவிக்கும் வகையில் பேசக்கூடியவர். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்த படம் கண்டிப்பா முழுவதுமாக நகைச்சுவை கலாட்டா நிறைந்த படமாக இருக்கும். நான் படம் முழுக்க பார்க்கவில்லை ஆனால் டப்பிங் செய்தும் மிகவும் ரசித்து செய்தோம். " என்று கூறினார்.