'பார்க்கிங்' இயக்குனர் அடுத்த படம் குறித்து தகவல் இதோ! | மாளவிகா மோகனனின் தெலுங்கு அறிமுகம் தள்ளிப்போக காரணமாக இருந்த விஜய் தேவரகொண்டா! | 'டாக்சிக்' ஹீரோயின்கள், யாருடைய போஸ்டர் அசத்தல்? | 'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த படம் தெலுங்கில் உருவானாலும் கூட தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் இந்தியிலும் பான் இந்தியா படமாகத்தான் உருவாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் திரைக்கதை மற்றும் தமிழில் வசனம் எழுதும் கூட்டணியில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாடி ராசாத்தி, அடியே அழகே என மென்மையான பாடல்களை எழுதிய விவேக் அதன் பிறகு ரஜினிக்கு மரண மாஸ், விஜய்க்கு சிம்டாங்காரன் என அதிரடியான பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானார். இந்தநிலையில், திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் எழுதுவது என தனது எல்லையை விரிவுபடுத்தி உள்ளார் விவேக். அது இயக்குனர் ஷங்கர் படத்தின் மூலமாக நிறைவேறி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள விவேக், இந்த படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது என கூறியுள்ளார்.