'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

கடந்த 2019ம் ஆண்டு ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் தியேட்டரில் மோதிக் கொண்டன. இதில் விஸ்வாசமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு ரஜினி நடித்த அண்ணாத்த படமும், அஜித் நடித்த வலிமை படமும் மோதிக் கொள்ள இருக்கிறது.
விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா தான் அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் ஹீமா குரைஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் ஆயுத பூஜை தினத்தன்று (அக்டோபர் 14) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி இருப்பதால் அஜித் படங்களுக்கே உரிய ஓப்பனிங் கலெக்ஷன் பாதிக்கும் என்பதால் படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிட தயாரிப்பாளர் தயங்குவதாக தெரிகிறது.
கொரோனா 3வது அலை தொடங்காவிட்டால் தீபாவளியை ஒட்டி 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் வலிமை படத்தையும் தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றைக்குள்ள சூழ்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் நம்பி இருப்பது பெரிய நடிகர்களின் படங்களைத்தான். ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவருவது தியேட்டர் வசூலை பாதிக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதனால் இரு படங்களையும் வெவ்வேறு நாட்களில் வெளியிட அவர்கள் தயாரிப்பாளர்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.




