'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரை போற்று. இப்படத்தை ஹிந்தியிலும் சுதா இயக்கத்தில் ரீமேக் செய்யப் போவதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் சூரரைப்போற்று படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும், அபுன் தாண்டியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிப்பதற்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து தடை கோரியது.
அதை தொடர்ந்து அப்படத்திற்கு தற்காலிகமாக தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சூரரைப்போற்று படத்தை தயாரித்த 2 டி எண்டர்டெயின்மெண்ட் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு அப்படத்தின் மீது தொடரப்பட்டிருந்தது தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.