தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழில் இந்தியன்-2, டான், பீஸ்ட், விக்ரம், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடுத்தபடியாக தெலுங்கில் கொரட்டல்லா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரது 30ஆவது படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் இசைப்பணிகளை செப்டம்பர் 1-ந்தேதி முதல் அவர் தொடங்குகிறார்.
மேலும், ஆர்ஆர்ஆர் படத்திற்காக கீரவாணி இசையில் நட்பு பாடலை பின்னணி பாடியிருந்த அனிருத், அதற்கு முன்பே தெலுங்கில் நானி நடித்த கேங்ஸ்டர் அஞ்ஞாதவாசி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். என்றாலும் அந்த படங்களின் பாடல்கள் ஹிட் அடிக்காததால் தெலுங்கில் அனிருத்திற்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை. என்றாலும் ஜூனியர் என்டிஆர் படம் மூலம் தெலுங்கிலும் தமிழைப்போலவே சைன் பண்ணி விடவேண்டும் என்று அனிருத் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.