ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ | இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தமன்னா | உரிமையாளர் பார்த்திபனுக்கே 'க்ளைம்' கேட்கும் படங்கள் | 100வது நாள் போஸ்டரை வெளியிட்ட 'டியூட்' | லாக்டவுன் : இந்த முறை சரியாக வந்துவிடுமா ? | ரஜினி 173வது படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? | பார்டர் 2 உடன் துரந்தர் 2 டீசர் இல்லை : இயக்குனர் வெளியிட்ட தகவல் | ரீ ரிலீஸ் மோதலில் விஜய், அஜித் ரசிகர்கள் |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வந்த படம் 'இந்தியன் 2'. 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவுற்றபோது, விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பிரச்சனை, கமல் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட சில காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்து வருகிறது. இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைக்கா வழக்கு தொடர்ந்தது. அதேசமயம் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி மத்தியஸ்தராக இருந்து இருதரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துபடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 'இந்தியன் 2' பட பிரச்சனையில் ஷங்கர் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை கமல் முடித்த பிறகு 'இந்தியன் 2' படத்தை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நீடித்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.




