சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவுக்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே கடந்த சில வருடங்களாக பிரச்சினை இருந்து வந்தது. மைக்கேல் ராயப்பன் தயாரித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பில் சிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு புகார் அளித்திருந்தார் தயாரிப்பாளர். அது முந்தைய விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் போதே பெரும் பிரச்சினையாக இருந்தது. அடுத்த வந்த நிர்வாகமும் மைக்கேல் ராயப்பன் சார்பாக களத்தில் இறங்கியது.
மேலும், தேனாண்டாள் முரளி, சுபாஷ் சந்திரபோஸ், சிவசங்கர் ஆகியோருக்கு சிம்பு தரப்பில் தர வேண்டிய பணத்திற்காகவும் அவர்கள் சங்கத்திடம் புகார் அளித்திருந்தனர். அனைத்து புகார்களையும் கருத்தில் கொண்டு சிம்புவின் புதிய படமாக ஆரம்பமான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பில் வந்து நின்றது.
தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளையும் மீறி அப்படத்தின் படப்பிடிப்பு நடத்த பெப்ஸி ஒத்துழைத்தது. அதனால், பெப்ஸி இல்லாமல் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என தயாரிப்பாளர் சங்கம் சொல்லியது. அதைக் கண்டு பெப்ஸி நிர்வாகம் அதிர்ச்சிக்குள்ளானது.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாம். அதன்படி நான்கு தயாரிப்பாளர்களுக்கும் தர வேண்டிய பணத்திற்கு 'வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உத்தரவாதம் கொடுத்துள்ளாராம். மேலும், தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் கடிதம் அளித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இதையடுத்து 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகப் போகிறதாம். சிம்புவின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பெப்சி சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.