
சர்வைவர் எனக்கு புது அனுபவம்: அர்ஜூன்
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஒரு தனித்த தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும். என்கிறார் அர்ஜூன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!