பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் |

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகை மேனகாவின் மகள். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தொடரி, பைரவா, ரெமோ, சாமி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'நடிகையர் திலகம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இதையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் 'சர்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் பாலா இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அவர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.