லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்துடன் இனி இணைந்து செயல்பட போவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகம் சுமூகமாகவும் பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்க்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதை திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புகொண்டார்கள்.
ஆனால் அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்மேளன தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்கள் தயாரிப்பாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது.
ஆகவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ் திரையுலத்தை காப்பாற்றும் வகையிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் 6-ம் தேதி நடைபெற்று கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்
1 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஒன் டு ஒன்) 6ம் தேதிமுதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக்கொண்டு திரைப்படத்திற்குண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை அலட்சிய படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.
4. மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்வதற்கோ எந்த அமைப்பவாது இடையூறு ஏற்படுத்தினாலோ பணிசெய்பவர்களை தடுத்தாலோ அவர்கள் மீது சட்ட படியான நடவடிக்கை எடுக்க படும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.