'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தம், பசுபதி இவர்கள் நடிகர்களில் தனி ரகம். பட வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தங்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே அந்த கேரக்டரில் நடிப்பார்கள். இந்த வரிசையில் வருகிறவர் பாவல் நவநீதன். எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் பாவல் நவகீதனும் ஒருவர். மெட்ராஸ் படத்தில் விஜி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். குற்றம் கடிதல் படத்தில் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில் மிரட்டினார். தொடர்ந்து மகளிர் மட்டும், வடசென்னை, பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
என்றாலும் பாவல் நவநீதன் சினிமாவுக்கு வந்தது படம் இயக்கத்தான். அதனால் நண்பர்களின் உதவியுடன் வி1 என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தியேட்டர்களில் அதிக வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. பாவல் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தற்போது வலிமை, பூமிகா, டாணாக்காரன், படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள திட்டம் இரண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அடுத்த நவரசா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இது தவிர ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற தெலுங்குப் படத்தில் முக்கிய வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார்.
மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவது பற்றி அவர் கூறியதாவது: இயக்கம் தான் எனது பிரதான நோக்கம். முதல் படம் எனக்கு நல்ல பெயரை கொடுத்தது. அடுத்த படத்துக்கான முயற்சியில் இருக்கிறேன். என்றாலும் நடிக்க அதிக வாய்ப்பு வருகிறது. அதையும் பயன்படுத்திக் கொள்கிறேன். சிறியவேடம், பெரிய வேடம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஒரு காட்சி வந்தாலும், ரசிகர்கள் பேசும்படி நடிக்க வேண்டும், என்பது தான் என் எண்ணம். என்றார்.