2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரோபோ சங்கர் நடுவராக அமரும் புதிய காமெடி ஷோவின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய காமெடி ஷோவாக கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
அந்நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. புரோமாவில் நடுவராக ரோபோ சங்கரும், கவர்ச்சி நடிகை ஷகிலாவும் கலந்து கொள்கின்றனர். ரோபோ சங்கர் நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்றார் போல், நித்யானந்தா வாய்ஸிலும் அடல்ட் காமெடி ஹர ஹர மஹாதேவி சாமியார் வாய்ஸிலும் பேசுகிறார். மேலும், பிரபல நடிகர்களை போலவே உருவ தோற்றமுள்ள இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏற்கனவே பங்குபெற்ற நபர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 வருகிற ஆகஸ்ட் 1 முதல் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.