ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தமிழக திரையரங்குகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டிலேயே தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாசகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகளுக்கு ரூ.15 மற்றும் 7 என்றும், பேரூராட்சி கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.5 மற்றும் 3 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இளவரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற இந்த கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானதாகி விடும். அதோடு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.