ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் |
எஸ்எஸ் டாக்கீஸின் முதல் தயாரிப்பில் சாய் செல்வா இயக்கத்தில் உருவாகும் படம் ‛வார்டு-126'. பெண்மையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. நாயகனாக மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனனும் நாயகிகளாக ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன் , வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீமன், நிஷாந்த், தீபா ஷங்கர், வினோத் சாகர், கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுரேஷ்குமார் ஒளிப்பதி செய்ய, வருண் சுனில் இசை அமைத்துள்ளார். சென்னை, நொய்டா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
‛‛இத்திரைப்படத்தின் தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக அமைந்துள்ளது'' என்கிறார் இயக்குனர் சாய் செல்வா.