'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் கே.வீரபாபு அழைக்கப்பட்டு, அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு, மரணமின்றி குணப்படுத்தப்பட்டது. மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ருபாய் விலையில் அவர் உணவளித்து வந்தார்.
தற்போது இவர் முடக்கருத்தான் எனும் புதிய படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, சிற்பி இசையமைக்கிறார். பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிற்பி - பழனி பாரதி கூட்டணி அமைக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது .