நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜேம்ஸ் பாண்ட், ஸ்பைடர் மேன், அயர்ன்மேன், அவென்ஞ்சர்ஸ் படங்கள் போன்று தொடர்ந்து பல பாகங்களாக வெளிவந்த படம் பாஸ்ட் அண்ட் பியூரியஸ். தற்போது இதன் 9வது பாகம் எப்9: தி பாஸ்ட் சாகா என்ற பெயரில் தயாராகி உள்ளது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை. பல முறை ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. கொரோனாவின் 2வது அலை சற்று தளர்ந்ததும் கடந்த மே மாதம் தென்கொரியாவில் முதலில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த மாதம் வெளியானது. படத்தை பற்றி இருவித விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படம் இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என்று யுனிவர்ஸல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ஆங்கிலத்தில் தயாராகி இருந்தாலும், இந்தியாவில் இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.