லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் தனுஷின் 43வது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் படத்திலிருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் பரவியது. அது மட்டுமல்ல படத்தின் நாயகன் தனுஷ் படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் என்றும் சொன்னார்கள்.
அந்தத் தகவல் வதந்தி அளவிற்கு வேகமாகப் பரவியது. 'ஜகமே தந்திரம்' கொடுத்த அடியால்தான் தனுஷ் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்றும் கோலிவுட்டில் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சற்று முன் ஒரு டுவீட் செய்துள்ளது.
அதில் கார்த்திக் நரேன் சொல்வதை தனுஷ் கேட்பது போன்ற புகைப்படத்துடன் “டி 43 கடைசி கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது,” என்றும் குறிப்பிட்டு தனுஷையும், கார்த்திக் நரேனை மட்டும் 'டேக்' செய்துள்ளார்கள்.