ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
பிரபு நடித்த உழவன் படத்தில் அறிமுகமான ரம்பா, அதைத் தொடர்ந்து கார்த்திக்குடன் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் பிரபலமானார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு தமிழ்,தெலுங்கு படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாடிய ரம்பா, 2010ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். ரம்பாவிற்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருந்தபோதும் இன்ஸ்டா கிராமில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரை பின்தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை தொட்டுள்ளது. அதையடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஆறு மொழிகளில் பாலோயர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரம்பா.
மேலும் சினிமாவில் நடிக்க தொடங்கி 30 ஆண்டுகள் நெருங்கிவிட்டது. இந்தனை ஆண்டுகளில் ரசிகர்களின் அன்பு ஒரு போதும் குறைந்தது இல்லை. சினிமாவில் நான் இல்லாமல் இருக்காமல். ஆனால் உங்களுடன் எப்போதும் நெருக்கமாக உள்ளேன். அனைவருக்கும் நன்றி' என்கிறார் ரம்பா.