மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
செய்தித் தலைப்பில் உள்ள 'போபியா'வைப் பார்த்ததும் தமிழ் சினிமாவில் வரும் ஏதோ ஒரு படத்தில் ஏதோ ஒரு கதையில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் பார்த்தது போல இருக்கிறது என நினைத்தால், நீங்கள் அதிகமான தமிழ் சினிமா பார்ப்பவர் என அர்த்தம்.
'டிரைபனோபோபியா' என்றால் என்ன என கூகுள் செய்த பிறகுதான் தெரிய வந்தது. அதாவது, மருத்துவ முறையில், ஊசி போட்டுக் கொள்வதில் உள்ள அதிகபட்சமான பயம். அதை “அய்க்மோபோபியா, பெலோனோபோபியா, எனிடோபோபியா' என்றும் சொல்லலாம் என்கிறது கூகுள்.
இப்படி ஒரு வார்த்தைக்கு இன்று கூகுள் செய்து தெரிந்து கொள்ள வைத்தவர் நடிகை ராய் லட்சுமி. அவர் கொரானோ தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். அந்த வீடியோவைப் பகிர்ந்து, “எனக்கு நிஜமாகவே டிரைபனோபோபியா. ஊசி போட்டுக் கொள்வதென்றாலே எனக்கு ரொம்ப பெரிய விஷயம். ஆனாலும், நான் போட்டுக் கொண்டேன். ஹேய்....சிரிக்காதீங்க,” என மற்றவர்கள் கிண்டல் செய்வதற்கு முன்பு அவரே அதை ஒத்துக் கொண்டுள்ளார்.
ராய் லட்சுமி பயந்து கொண்டே ஊசி போட்டதையும் இன்ஸ்டாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். மற்றவர்கள் ஊசி போட பயப்படுவதை ரசிக்கும் அந்த வீடியோவைப் பார்த்த 7 லட்சம் பேரில் எத்தனை பேர் ஊசி போட்டுள்ளார்களோ ?.