சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
இந்தியாவில் திரையிடப்படும் திரைப்படங்களை மத்திய திரைப்பட தணிக்கைத் துறை தணிக்கை செய்து அவற்றிற்கு யு, யு-ஏ, ஏ என சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இப்போது இந்த சான்றிதழ் முறையில் சிறு மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாம்.
1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திரைப்படத் தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்படும் படங்களை திரைப்படத் தணிக்கை டிரிப்யூனலில் முறையிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த டிரிப்யூனல் அமைப்பை மத்திய அரசு கலைத்துவிட்டது.
மேலும், யு-ஏ சான்றிதழ் எனப்படுவது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றோர் வழிநடத்தலில் பார்க்கலாம் என்பதாக இருந்தது. அதில் இனிமேல், “யு-ஏ 7 +, யு-ஏ 13+, யு-ஏ 16+” என மூன்று மாற்றங்களைச் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
டிரிப்யூனல் கலைக்கப்பட்டதற்கு திரைப்படத் துறையைச் சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய திருத்தங்கள் அமலாகும் போது அது குறித்து மேலும் கருத்துக்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.