தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
'விஸ்வாசம்' படம் வெளிவந்த பின் அதன் இயக்குனர் சிவா, அடுத்து சூர்யா நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் 2019 ஏப்ரல் மாதம் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அப்போது சூர்யா நடித்து வந்த 'சூரரைப் போற்று' படம் முடிந்ததும் அப்படம் ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், 2019 அக்டோபரில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து சூர்யா, சிவா படம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது.
இப்படித்தான் 'மெட்ராஸ்' படம் வெளியான போது பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்றார்கள். ஆனால், அவரோ ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை இயக்கப் போய்விட்டார். அது போலவே தான் சிவா - சூர்யா படத்திலும் நடந்தது. சிவா, ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தை இயக்கப் போய்விட்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட படத்தை கைவிடாமல் அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளார்களாம். 'அண்ணாத்த' படம் முடிந்ததும் சிவா - சூர்யா படம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் தன்னுடைய 40வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளாராம். அப்படத்துடனேயே சூர்யா, சிவா படமும் ஆரம்பமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி மீண்டும் ஒரு அறிவிப்பு வரலாம்.