ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கருக்கு அதிதி, ஐஸ்வர்யா என இரண்டு மகள்களும், அர்ஜித் என்ற மகனும் இருக்கிறார்கள். மூத்த மகளான அதிதிக்கு கடந்த வருடமே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
பிரபல பிஸினஸ்மேன் குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகனுக்கு தன் மகளை நிச்சயம் செய்துள்ளார் ஷங்கர். திருமணம் அடுத்த வாரம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திருமணத்தில் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் திருமணத்தையும் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
தளர்வுகள் முழுவதுமாக வந்த பிறகு சென்னையில் அனைவருக்குமாக திருமண வரவேற்பு நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். தனது மகளின் திருமணம் குறித்த தகவலை ஷங்கர் விரைவில் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.