அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி |
தமிழ்த் திரையுலகத்தில் மீண்டும் ஆங்கில வார்த்தை தலைப்பைத் திரைப்படங்களுக்கு வைப்பது அதிகரித்துள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு 'பீஸ்ட்' எனத் தலைப்பு வைத்திருப்பது குறித்து ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ரஜினிகாந்த் இதுவரையில் தமிழில் 110 படங்களில் நடித்திருக்கிறார். ஆங்கிலத்தில் தலைப்பை வைத்ததில்லை என்று குறிப்பிட்டு பெருமைப்பட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்துள்ள பெரும்பாலான படங்களின் பெயர்கள் தமிழில் தான் உள்ளன. அதிலும் அவர் 80களில் அதிகமான படங்களில் நடித்த போது அனைத்துமே தமிழ்ப் பெயர்கள்தான்.
அன்று முதல் இன்று வரையிலும் ஒரு சில படங்களின் தலைப்புகளில் ஒரு சில எழுத்துக்கள் மட்டும் வேற்று மொழிக் கலப்புடனும், சில படங்களின் தலைப்புகள் பெயர்களைக் குறிப்பிடும் தலைப்புகளாகவும், ஓரிரு படங்களின் தலைப்புகள் மட்டுமே வேற்று மொழியில் இருந்துள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் எந்தத் தலைப்பும் இல்லை என்றகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.