மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
பண்பலை ரேடியோ மூலம் புகழ்பெற்றவர் ஆர்ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கி என்பதே அவரது பெயரின் இன்ஷியலாகும் அளவிற்கு ரேடியோவில் புகழ் பெற்றார். அதன்பிறகு சினிமாவில் காமெடி நடிகனாக அறிமுமானவர் எல்.கே.ஜி என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆனார், மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். தற்போது சில படங்களில் நடித்து வந்தாலும் மீண்டும் ரேடியோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
உலக புகழ்பெற்ற ஸ்பாட்டிபை என்ற ஆன்லைன் ரேடியோவில் நாலணா முறுக்கு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ரேடியோ உலகின் பல மொழிகளில் ஒலிபரப்பாகிறது. தமிழில் இப்போது தனது சேவையை தொடங்கி உள்ளது. 35 கோடி நேயர்களை கொண்ட பெரிய ஆன்லைன் ரேடியோ இது.
இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறியிருப்பதாவது: ஸ்பாட்டிபை நிறுவனம் முதன்முதலாக தமிழில் ஒரு ஆடியோ நிகழ்ச்சி வழங்குவதற்காக என்னிடம் கேட்டனர். நம்மை சுற்றி நடக்கும் நிறைய நல்ல விஷயங்களை வாராவாரம் திங்கள்கிழமை 'நாலணா முறுக்கு' என்ற பெயரில் வழங்குகிறேன். இந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலே, இலவசமாக கேட்கலாம். நல்ல விஷயங்களை மட்டுமே பேசுகிற களமாகத்தான் இதை பயன்படுத்த உள்ளேன். என்கிறார்.