விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

சின்னத்திரை தொடர்கள், பாட்ஷா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர், ‛இன் த நேம் ஆப் காட் என் தெலுங்கு வெப்சீரிசை தயாரித்துள்ளார். ப்ரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் முத்துகுமார் எழுதி இயக்கியுள்ளார்.
வெப்சீரிஸ் குறித்து அவர் கூறுகையில், ‛‛காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் இந்த வெப்சீரிஸ். இத்தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளாகவே ஈர்ப்பு இருந்தது. நல்ல எதிர்காலம் உள்ள, சுதந்திரமான தளமிது. நினைத்ததை அப்படியே கொண்டு வரமுடிகிறது. இதை தயாரிக்க அல்லு அர்ஜுன் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. தெலுங்கில் வெளியாகியுள்ள இத்தொடர், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வரலாம்,'' என்றார்.
பொதுவாக வெப்சீரிஸ்களுக்கு கட்டுப்பாடு தேவை என பலரும் கருத்து கூறி வரும் நிலையில், சுரேஷ் கிருஷ்ணா இதில் உள்ள சுதந்திரத்தை போற்றியுள்ளார்.