ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த 'மாஸ்டர்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கப் போவதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சல்மான் விரைவில் வெளியிடுவார் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தைப் பார்த்த சல்மான் தனக்குப் பொருத்தமான கதையாகவும், கதாபாத்திரமாகவும் இருக்குமென உற்சாகமடைந்ததாகச் சொல்கிறார்கள்.
இம்மாதிரியான ஹீரோயிசக் கதைகள் சல்மானுக்கு எப்பவுமே ரொம்பவும் பிடிக்கும். அவரை அப்படிப்பட்ட கதைகளில் தான் அவருடைய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். இயக்குனர், மற்ற நடிகர்கள், நடிகைகள் யார் என்பது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு அறிவிப்பு வரலாம்.
'மாஸ்டர்' படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டாலும் வெற்றி பெறவில்லை. மாறாக சல்மான் கான் நடிக்க ரீமேக் செய்தால் தமிழைப் போலவே பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.