ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா தாக்கம், தற்போது இரண்டாவது அலையாக உருமாறி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ராணா, தெலங்கானாவின் வடக்கு பகுதியில் உள்ள நிர்மல் என்கிற மாவட்டத்தை சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தற்போது விராட பர்வம் என்கிற படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள ராணா, அந்த படப்பிடிப்பின்போது அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் என்பதால் அவர்களின் தேவையறிந்து, இந்த உதவியை செய்துள்ளார் என கூறப்படுகிறது.