பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பாகுபலி 2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் படப்பிடிப்பை ரத்து செய்தார். அதனால் அக்டோபரில் வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகிறது.
இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக ஒரு குறும்படத்தை இயக்கும் ஸ்கிரிப்ட் வேலைகளில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த குறும்படம் லாக்டவுன் நேரத்தில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் எந்தமாதிரியெல்லாம் உயிரையும் பணயம் வைத்து அவர்கள் ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் கதையாக உருவாகிறதாம். இதற்காக முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள சில காவலர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளாராம் ராஜமவுலி.