பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது |
தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசிய சிவகார்த்திகேயன், தற்போது தனது ரசிகர்களுக்காக ஆடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருடன் தனித்தனியாக பேச முடியாததால் இந்த ஆடியோ பதிவு. அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து மிகவும் அவசியம் என்றால் தான் நீங்கள் வெளியே போக வேண்டும். எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள். இரட்டை முககவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள்.
முககவசத்தை சரியாக அணிந்து கொரோனாவிலிருந்து தப்பியவர்களை பார்த்திருக்கிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் போட்டுக் கொண்டேன். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை ரொம்ப கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களையும் வெளியே போகவிடாமல் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமான வேலை இருந்தால், அதற்கு மட்டும் வெளியே சென்றுவிட்டு, உடனே வீட்டிற்கு வந்து விடுங்கள் மிகவும் பத்திரமாக இருந்தால் கொரோனா சீக்கிரமாக முடிந்துவிடும். அவரவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிடலாம். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். உடம்பை கவனித்து கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும்.
இவ்வாறு பேசியிருக்கிறார்.