சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் |
சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகியுள்ள பேமிலிமேன் வெப் தொடரின் இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என ஒரு பக்கம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அதேசமயம் சமந்தாவோ அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இந்த வெப் தொடரின் சோஷியல் மீடியா புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம், பாலிவுட்டில் மனோஜ் பாஜ்பாய் தவிர, யாருடன் ரொமான்ஸ் பண்ண ஆசை என கேட்க, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை வெளியிட்டார் சமந்தா. மேலும் இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள ஸ்ரீகாந்த் திவாரி கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறு யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்கிற கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், தனது மாமனாரான நடிகர் நாகார்ஜுனாவின் பெயரை கூறியுள்ளார் சமந்தா.