'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
மும்பையை சேர்ந்த மாடல் அழகி மீனாட்சி ஜெய்ஸ்வல். மணிப்பூரை சேர்ந்த இவர் மிஸ்.உத்தர பிரதேசமாக டைட்டில் வென்றவர். அதன்பிறகு மாடல் அழகியாகவும், விளம்பர நடிகையாகவும் மாறினார்.
தாதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது விஜய் யேசுதாஸ் ஜோடியாக சல்மான் 3டி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகிறது. லவ் நாட் பார் மீ என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார்.
மீனாட்சிக்கு தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறதாம். சல்மான் 3டி வெளிவந்த பிறகு தனக்கு வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதற்கிடையில் தமிழில் தனக்காக வாய்ப்பு தேடவும், கதை கேட்கவும் மேலாளரை நியமித்து அவர் மூலம் தனது சமீபத்திய புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அனுப்பி வருகிறார்.