'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் |
தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமைகளில் ஒருவரான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீனும், இணைந்து முகம்மது நபிகளை புகழும் ஒரு தனித்துவ பாடலை பாடியுள்ளார்கள். இந்த பாடல் இன்று(மே 14) ரம்ஜான் திருநாளில் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
தலா அல் பத்ரு அலைனா (TALA AL BADRU ALAYNA) எனும் இப்பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை, போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை பாடலை அடிப்படையாக கொண்டது. மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் வருகைபுரிந்த போது, மதீனா மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல் இதுவாகும்.
யுவன் சங்கர் ராஜா கூறுகையில், இத்தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். தலா அல் பத்ரு அலைனா போன்ற தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. மேலும் எனது சகோதரர் அமீன் அவர்களுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார்.
அமீன் கூறியதாவது : நபிகளை போற்றும் தெய்வீகமான பாடலை சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதி அருளட்டும் என்றார்.
“தலா அல் பத்ரு அலைனா” பாடலின் முழு அர்த்தத்தை தமிழ் மொழியில் தந்துள்ளார் அப்துல் பசீத் புகாரி. பாடலுக்கான இசை வடிவத்தை உருவாக்கி, அமீன் உடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. முழுமையான தனித்துவ பாடலாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் மூலம் வரும் அனைத்து வருமானமும், தேவையுள்ள ஏழை, எளியோர்ருக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பாடலின் முழு வீடியோ வடிவம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.