கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
2 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தியில் வெளியான படம் ஆர்டிகள் 15. அனுபவ் சின்ஹா இயக்கிய இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குராணா, நாசர், மனோஜ் பவா, குமுத் மிஸ்ரா, இஷா தல்வார் நடித்திருந்தார்கள். போலீஸ் பயிற்சிக்காக கிராமத்துக்கு செல்லும் இளம் போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு பள்ளி வாகனத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இரண்டு சிறுமிகளின் வழக்கை எடுத்து விசாரித்து, எதிர்ப்புகளை மீறி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிற கதை.
இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. ஆயுஷ்மான் குராணா நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்கியது.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நடித்தார். படத்தை ஜீ ஸ்டுடியோ, போனி கபூரின் பேவியூ ப்ராஜக்ட், ரெமோ பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது.